day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

புற்றுநோயை வீழ்த்துவோம்

புற்றுநோயை வீழ்த்துவோம்

புற்றுநோயா? இனி மரணம்தான் என்று இருந்த காலம் அது. அப்போது இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்காக இரண்டு மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. மூன்றாவதாக உருவானதுதான் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. அதில் இணைந்து அதை
உலகத் தரத்திற்கு மாற்றியவர் டாக்டர் வி.சாந்தா.

பத்மவிபூஷண் பட்டம் டாக்டர் சாந்தாவுக்கு 2016இல் வழங்கப்பட்டது. 2005இல் மிகவும் கௌரவம் மிக்க ராமோன் மாக்சேசே விருது டாக்டர் சாந்தாவுக்கு கொடுக்கப்பட்டது. அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கே வழங்கிவிட்டார் டாக்டர் சாந்தா.
தன் வாழ்க்கையையே மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தவர் டாக்டர் சாந்தா.
டாக்டர் சாந்தா 1927இல் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். மயிலாப்பூர் நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அது இப்போது லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்று அறியப்படுகிறது. படிக்கும் காலத்திலேயே ஒரு மருத்துவர் ஆகிவிட வேண்டும் என்று இலட்சியம் கொண்டிருந்தார் சாந்தா. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த சர் சி.வி.ராமனும், எஸ். சந்திரசேகரும் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள்.
இலட்சியக் கனவின் வழியே சென்ற சாந்தா 1949இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். பிறகு எம்டி பட்டமும் பெற்றார். அந்தக் காலத்தில் பெண் மருத்துவர் என்றால் மகப்பேறு மருத்துவர்களாகத்தான் இருப்பார்கள்.
‘எங்கள் கல்லூரியில் பேசிய டாக்டர் கிருஷ்ணமூர்த்தி புற்றுநோயாளிகளுக்காக ஏன் ஒரு மருத்துவமனை இயங்கக் கூடாது என்றார். அது என்னைக் கவர்ந்தது. சிந்திக்க வைத்தது,’ என்று முகம் மலர்கிறார் டாக்டர் சாந்தா.
நுழைவுத் தேர்வில் வென்று குழந்தைகள் மருத்துவமனையில் கிடைத்த வேலையையும் நிராகரித்தார் அவர்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1954இல் சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியிருந்தார். அதில் சென்று சேர்ந்துவிட்டார் டாக்டர் சாந்தா.
அப்போது புற்றுநோய் மருத்துவமனை ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்தது. 12 படுக்கைகளே அங்கு இருந்தன. அவருடன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் பணிபுரிந்தார். கௌரவ மருத்துவராக டாக்டர் சாந்தாவுக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டது. அதே வளாகத்தில் அவர் தங்கிக்கொண்டார்.
‘அந்தக் காலத்தில் புற்றுநோய்க்குப் பொது அறுவை சிகிச்சை நிபுணர்களே அறுவை செய்துவிடுவார்கள். நான் கனடாவில் கதிரியக்கச் சிகிச்சைப் பயிற்சி முடித்தேன்’ என்று பெருமிதம் கொள்கிறார் அவர்.
பண வசதியோ, ஊழியர்கள் எண்ணிக்கையோ இல்லாத அந்தக் காலத்தில் டாக்டர் சாந்தாவே அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு அரங்குகளை சுத்தம் செய்வார், நோயாளிகளுக்கு கட்டுப் போடுவார், மருந்து தருவார், ஊசி போடுவார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புகழ் மெதுவாகப் பரவத் தொடங்கியது. 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு அது வளர்ந்தது. ஆனால் நோயாளிகள் எண் ணிக்கை அதிகரித்தாலும் வசதிகள் குறைவாக இருந்தன. தாழ்வாரங் களில் எல்லாம் நோயாளி களை இருக்கச் சொல்லும் நிலை வந்தது. ஒரு நாள் ஒரு பெரிய செல்வந்தர் வந்து நன்கொடை வழங்கினார். பிறகு மெதுவாக அரசாங்கத்தின் உதவியும் கிடைக்கத் தொடங்கியது.
இப்போது 650 படுக்கை கள் இந்த மருத்துவமனையில் உள்ளன.
இங்கு அனைவருக்கும் ஒரேவிதமான தரமான சிகிச்சை வழங்கப் படுகிறது; சுமார் 40 சதவீத ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
புற்றுநோய் சிகிச்சை மிகவும் நவீனமாக வளர்ந்துவிட்டது. ஆனால் அதை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்து குணப்படுத்துவற்கான முயற்சிகளைத்தான் நாம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் டாக்டர் சாந்தா.
ஆண்களுக்கு நுரையீரல், தொண்டைப் புற்று நோய் வருகிறது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது. இவை முழுக்கக் குணப்படுத்தக் கூடியவை என்றும், ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும் என்றும் கூறுகிறார் டாக்டர் சாந்தா.
‘இன்னும்கூட நம்முடைய அரசாங்கங்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்று கவலைப்படுகிறார் அவர்.
கோவிட்-19க்கு முக்கியத்துவம் தந்தாலும் புற்றுநோய்க்குத் தரும் அவசியத்தைக் குறைத்துவிடக் கூடாது என்கிறார் அவர்.
தன் சேவையில் எப்போதும் சோர்ந்துபோனதில்லை என்று உற்சாகக் கூறுகிறார் டாக்டர் சாந்தா. ‘விவேகானந்தர் சொன்னது போல எந்த வேலையாக இருந்தாலும் முழுமையாக ஈடுபட வேண்டும்.’
இன்னும் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் டாக்டர் சாந்தா.
இன்னும் தான் சாதிக்க நிறைய இருக்கி றது என்று உறுதியுடன் கூறுகிறார் அவர்.
குழந்தைகளுக்கு வரும் புற்றுநோயையும் முழுக்க குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார் டாக்டர் சாந்தா. அதை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்று நம்மிடம் அவர் கேட்டுக்கொள்கிறார்.
‘டாக்டர் சாந்தா, உங்களைப் போன்ற அர்ப்பணிப்பு மனம் கொண்ட மருத்துவர்கள் இப்போது இருக்கிறார்களா?’ என்று கேட்கிறோம்.
‘அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்’ என்று சொல்கிறார் அவர்.
‘சொல்லுங்க டாக்டர்’ என்று கெஞ்சலாய் கேட்கிறோம்.
‘இங்கு எல்லாம் வணிகமயம் ஆகிவிட்டது. குழந்தைகளின் மனதில் சேவை மனப்பான்மையை நாம்தான் உருவாக்க வேண்டும்’ என்கிறார் அவர்.
‘ஏசு கிறிஸ்து சொன்னது போல இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறியாது செய்கிறார்கள்’ என்று சொல்கிறார் டாக்டர் சாந்தா.
‘தொலைக்காட்சியில் குழந்தைகளை மோசமாகச் சித்தரிக்கிறார்கள். வன்மம், கோபம், வன்முறை செய்பவர்கள் போல குழந்தைகளைக் காட்டுகிறார்கள். இதைத் திருத்தினால்தான் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் வளர்ந்து, சமூக வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்’ என்று அறிவுரை கொடுக்கிறார் டாக்டர் சாந்தா.
கடந்த அறுபது ஆண்டுகளில் புற்றுநோய் பாதித்தவர்களில் 40 சதவீதம் பேரை முழுக்கக் குணப்படுத்த முடிகிறது. அடுத்த அறுபது ஆண்டுகளில் புற்றுநோய் பாதித்த அனைவரையும் முழுக்கக் குணப்படுத்திவிட முடியும் என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் சாதனை நாயகி டாக்டர் சாந்தா.

– டாக்டர்.சாந்தா

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!