டெல்லியில், புடவை அணிந்த வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த உணவகத்திற்கு, சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர உணவகத்திற்கு, அனிதா சவுத்திரி என்ற பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார்.அப்போது உணவகத்திற்கு செல்ல விடாமல் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஊழியருக்கு அனிதா சௌவுத்திரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் உணவக ஊழியர் “ஸ்மார்ட் உடையான மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே, உணவகத்திற்குள் செல்ல அனுமதிப்போம்”என்று கூறியுள்ளனர் இது குறித்து, ஊழியரிடம்,”அந்த பெண் உரையாடும் காட்சிகள் அடங்கிய, ‘வீடியோ’ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில் பேசும் பெண், ‘புடவையில் வந்தால், உணவகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லையா’ என, கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த பெண் ஊழியர் ஒருவர்,’ ஸ்மார்ட்டான உடையான மேற்கத்திய உடையில் வருவோருக்கு மட்டுமே நாங்கள் அனுமதி வழங்குகிறோம். புடவை ஸ்மார்ட்டான உடை இல்லை என்பதால் அனுமதி இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, ‘பேஸ்புக், டுவிட்டர், ‘யுடியூப்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 2.25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், இந்த வீடியோவை பார்த்து உள்ளனர். இதை பார்த்த பலரும், தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.