கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரில் உள்ள பால்மா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தென்கொரிய வீராங்கனை அன் சியோங் உடன் மோதினார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் பி.வி. சிந்து 14-21, 17-21 என்ற செட் கணக்கில் அன் சியோங்கிடம் போராடி தோல்வியைத் தழுவினார். இதன்மூலம், அன் சியோங் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.