மராட்டிய மாநில சட்டசபையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த் ஜாதவ் என்பவர், கோலாப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். சந்திரகாந்த் ஜாதவ் இருந்தார். இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். இதையடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த கடந்த 12ம் தேதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் மறைந்த சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ ஜாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிஜேபி சார்பில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தனஞ்செய் மகாதிக்கின் உறவினரான சத்யஜித் களம்கண்டார். காங்கிரஸ் – பிஜேபி இடையே பயங்கர போட்டி நிலவினாலும், காங்கிரஸுக்கு ஆளும் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து, நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவ் அமோக வெற்றிபெற்றார். அவர் 96 ஆயிரத்து 176 வாக்குகளும், சத்யஜித் கதம் 77 ஆயிரத்து 426 வாக்குகள் பெற்றனர். சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதாவை ஆளும் கூட்டணிக் கட்சிகள் வீழ்த்தியுள்ளன. பீகார், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 4 எல்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி. தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்திருக்கிறது என்பதும் அதில் சத்தீஸ்கர், மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.