பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா வெளியேறியதற்கு அவருக்கு கடுமையான சிறுநீர் தொற்று ஏற்பட்டதே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிந்து, தற்போது ஐந்தாவது சீசன் துவங்கி, நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை, சச்சரவுகள், மோதல்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல.இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கை நமீதா திடிரென வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை நிகழ்ச்சியில் தெரிவிக்காதது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக நமீதா மாரிமுத்துவுக்கு கடுமையான கொரோனா தொற்று ஏற்பட்டதே அவர் வெளியேறியதற்கான காரணம் என்று சொல்லப்பட்டது. நமீதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தால், அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை போட்டியாளர்களையும் தனிமைப்படுத்தி இந்நேரம் நிகழ்ச்சியையே நிறுத்திருக்க வேண்டும். ஆனால் நிகழ்ச்சி வழக்கம் போல் ஒளிபரப்பானது. இதன் மூலம் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நமீதா மாரிமுத்துவுக்கும், தாமரை செல்விக்கும் இடையே அடிதடி சண்டையே நடந்துள்ளதாக நமீதா ரத்தக் காயங்களுடன் வெளியேறியதாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் நமீதாவுக்கு கடுமையான சிறுநீர் தொற்று ஏற்பட்டதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய திருநங்கை ஒருவர் “பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படும்.குறிப்பாக பொது கழிவறையை பயன்படுத்தும் போது இப்படியான பிரச்னை ஏற்படும்.அதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநங்கைகள் தனியாக உள்ள கழிவறையைத்தான் பயன்படுத்துவார்கள்.நமீதா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்தி வந்த கழிவறை அனைவருக்கும் பொதுவானது என்பதால் அவருக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.”என்றார்