தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல மரபணு மாற்றங்களை அடைந்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில், தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமைக்ரான் வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் கூறுகையில் “தென்ஆப்பிரிக்காவில் பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. புதிய வைரஸ்கள் தென்ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், அவை பல நாடுகளின் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்றார்.