வீடு, கடைகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்த காலம்போய், இன்று பாலத்தையே களவாடும் நிலை மாறியிருக்கிறது. பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில், அமியாவார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கால்வாயின் குறுக்கே 45 ஆண்டுக்கால பழைமையான இரும்புப் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. 69 அடி நீளம்கொண்ட இந்தப் பாலம், முற்றிலும் இரும்பினால் ஆனது. இதன் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளை கும்பல் ஒன்று, 500 டன் எடைகொண்ட இரும்புப் பாலத்தை வெட்டி எடுத்து தூக்கிச் சென்றிருக்கிறது. திடீரென இரும்புப் பாலம் மாயமானதை கண்டு அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.