கரூர் மாவட்டம், கரூர் தாலுகா அலுவலகம் அருகில் பாரதீய கட்டுமான அமைப்புசாரா ஓட்டுநர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன மாநில பொறுப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ.1,000லிருந்து ரூ.3,000மாக உயர்த்தி வழங்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஓட்டுனர்கள் பணி நேரத்தில் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களையும் ஈ.எஸ்.ஜ மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பாரதீய கட்டுமான அமைப்புசாரா ஓட்டுநர் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.