ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் பெண்களுக்கு எதிராய் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்நாட்டு மக்களில் பலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் மற்றும் குணார் ஆகிய இரு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் ஒன்று அதிரடியாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இந்த தாக்குதலில், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு கண்டனம் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதருக்கு தலிபான்கள் சம்மனும் அனுப்பியுள்ளனர். மேலும், இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடைபெற்றால், அது யாருக்கும் சாதகமாக இருக்காது என்றும் அவர்கள் பாகிஸ்தானுக்கு எச்சரித்துள்ளனர்.