சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசுப் பேருந்தில் அவரது புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்-ராஜ் ஆலிவர் தொடங்கிவைத்தார். கலெக்டருடன் மாணவ-மாணவிகளும் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்தப் பேருந்து, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் செல்ல உள்ளது.