பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி நெறிமுறைகள் இருக்கிறது. அதேபோல, பள்ளிகளில் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளிலும் உருவாக்கலாம் என பரிந்துரைத்துள்ளனர். பள்ளிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும், இந்த மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.