அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. வருகிற 15ம் தேதி வரை இந்த உறுப்பினர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நேற்றுவரை காங்கிரஸ் கட்சிக்கு டிஜிட்டல் மூலம் 2.15 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 5 மாநில தேர்தல் தோல்வி, அதிருப்தி தலைவர்கள் என பிரச்சினைகளில் சிக்கி இருக்கும் நிலையில் சுமார் 2.15 கோடி டிஜிட்டல் உறுப்பினர்களை காங்கிரஸ் சேர்த்திருப்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.