டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம். அரசியலமைப்புச் சட்டம் செயலிழந்தால், தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள். நாட்டில் பதவிக்காக ஆசைப்படும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அதிகாரத்தை அடைவதைப் பற்றியே சிந்திக்கிறார்கள்’ என்றார்.