கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. அறிமுக நாகயன் யஷ் நடித்த இந்த கன்னடத் திரைப்படம் யாரும் எதிர்பாரத வகையில் மெகா ஹிட் அடித்தது. இதற்கு முக்கிய காரணம் கன்னடத் திரைப்படங்களில் இதுவரைக் கட்டப்படாத கதையும், கதைகளமும் தான். இந்தநிலையில் ரசிகர்களின் அமோக வரவேற்புக்கு பிறகு கே.ஜி.எப். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் தயாரன இந்த படம் ரூ.250 கோடிக்கு மேல், பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடித்து இருக்கும் இந்தபடத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து மிரட்டி வந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படத்துக்கும் நேர்மறையான வரவேற்று பெற்றுவருகி்றது. பெரிய திரையில் ரசிகர்கள் கொண்டாடும் படமாக கேஜிஎஃப் 2 வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.