15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 48ஆவது லீக் ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மோதியது. நேற்று இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தபோட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வுசெய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இந்ததொடரில் இது பஞ்சாப் அணியின் 5ஆவது வெற்றியாகும். இந்தஆட்டத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்துக்கு பஞ்சாப் அணி முன்னேறி உள்ளது. இந்ததொடரில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவருகிறது. குஜராத் அணி, இந்ததொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.