தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர், இன்ஸ்டா சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் அவரை வெறுப்பேற்றும்படியாக கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், ‘உங்களது உள்ளாடை சைஸ் என்ன’ என்று கேட்டிருந்தார். ஆனால் அதற்குக் கோப்படாத பிரியா, ‘மார்பகங்களை நான் வேற்றுக் கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு அது உள்ளது’ எனப் பதிலடி கொடுத்தார். இது, சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருது.