இந்துக்களின் புனித பண்டிகையாக ‘ராமநவமி’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராமநவமி 10ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்தி பூஜையறையில் ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்யலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.