தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல, இந்திய அளவிலும் கடந்த சில நாட்களாகவே 2500 கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சுமார் 4,000த்தை நெருங்கி வருகிறது. முன்னதாக ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா 4ஆம் அலை உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழத்தில் இதுவரை சுமார் 50,00,000 பேர் முதல் தவணை மற்றும் சுமார் 1,48,00,000 பேர் 2ஆம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. அதேபோல, 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்கள் சுமார் 2 கோடி பேர் இன்னும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இந்தநிலையில் நாளை நடைபெற இருக்கும் தடுப்பூசி முகாம்களில் நிர்ணயக்கப்பட்ட இலக்கிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.