பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாதங்களிலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ’மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுடன் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகள், தகவல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, மே மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில், அசாம் வெள்ளம், குரங்கு அம்மை, வடமாநில அனல் காற்று உள்ளிட்ட சம்பவங்களுடன் மோடியின் அன்மைகால வெளிநாட்டு பயணங்கள் குறித்து பேசுவார் எனவும், இத்துடன் மோடியின் தமிழக பயணம் குறித்த தனது அணுபவங்களை பகிர்வார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.