டெல்லி சென்றிருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசுவார் என தெரிகிறது. பின்னர், தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை இரவு சென்னை திரும்புகிறார்.