நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா – கிருடிஷ் திருமணம் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை விஷால் அவரின் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், இதைவிட என்ன கேட்டுவிட முடியும், நான் மாமா ஆகியிருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. என்னுடைய இளவரசி தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.