பஞ்சாப் மாநிலத்தில் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் குர்னம்சிங் என்ற முதியவர் உயிரிழந்தார். இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்தி முதியவர் உயிரிழப்புக்கு காரணமான, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு சித்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் சித்து மேல்முறையீடு செய்தார். இதனையடுத்து, கிட்டதட்ட 34 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நவ்ஜோத் சிங் சித்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.