இன்றைய இயந்திரகதியான வாழ்க்கை முறையால் இயல்பான நாட்களிலேயே நம்மில் பலருக்கும் மன அழுத்தம் இருக்கும். கொரோனா ஊரடங்கு அந்த அழுத்தத்தை அதிகரித்திருக்கிறது. ஆறிலிருந்து அறுபது வயது வரை வயது வேறுபாடில்லாமல் பலரும் மன அழுத்தத் துக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீள்வது?
மன அழுத்தம் என்பது நோயல்ல. இது ஒரு நிலை Contition). நம்மால் உணரப்படுவதே தவிர குறைபாடல்ல. நம் ஒவ்வொருவருடைய வாழ்நாட்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த நிலையைச் சந்தித்திருப்போம். சிலர் அதில் சிக்கித் தவித்து நாள்பட்ட மன அழுத்தத்தில் இருக்கலாம். பலர் அதிலிருந்து மீண்டும் வந்திருக்கலாம்.
உடலியல் ஆய்வுகளின்படி தன்னை ஏதாவது உடல்ரீதியாகத் தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலைத் தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவும். இது உடலியல் முறையில் நடக்கக்கூடியது. இந்தச் செயல்பாடு பல சமயங்களில், மனரீதியாகவோ சமூகம், சூழல் மற்றும் செய்யும் வேலையின் காரணமாகவோ இந்த உந்துதல் அதிகமாகி பல நேரங்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் பருவமடைதலின்போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு மன அழுத்தம் மனநிலை மாற்றங்களாக (Mood Swing) ஏற்படும்.
கர்ப்ப காலங்களில் மனநிலையை மாற்றக்கூடிய ஹார்மோன்களாலும், வாழ்க்கை முறை மாற்றங்களாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இவை இரண்டும் தற்காலிகமானவை, எளிதில் சமாளிக்கக்கூடியவை. மேலும், இது அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படும் என்பதால் இந்த வகை மன அழுத்தம் நிர்வகிக்கக்கூடியதுதான்.
மற்ற காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம் 40 சதவீதம் பரம்பரையாக ஏற்படுவது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின்போது ஏற்படும் மன அழுத்தம் சற்றுக் கடினமானதாக இருக்கும். இந்த வகை மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்கள் தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகள், துயரத்துடன் இருத்தல், பசியின்மை, உடற்சோர்வு, ஒரு சின்ன நுட்பமான வேலையைச் செய்வதிலும் சிக்கல், எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்ற நிறைய அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் மன அழுத்தத்தினால் ஏற்படுகின்றன என்று ஒவ்வொருவரும் உணர்வதற்கே பல மாதங்கள் ஆகிறது.
பெண்கள் பருவடைதலின்போது ஹார்மோன் மாற்றங்களால் மன அழுத்தம் அடைகிறார்கள். இது சிலருக்கு மனநிலை மாற்றங்களாக ஏற்படும். மேலும், இந்த அறிகுறிகளைக் கையாள்வதை ஒவ்வொரு பெண்ணும் சிரமமாகக் கருதுகின்றனர். இந்தப் பிரச்சினையைச் சற்று உற்று நோக்குகையில் இது ஆரம்ப காலத்தில் பயம், பதற்றம் என்ற மனம் சம்பந்தப்பட்ட நோயாக இருந்து நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. ஆரம்ப காலத்தில் நம்மால் சரி செய்யக்கூடிய நிலையில் இருக்கும் மன அழுத்தம் நாட்கள் செல்லச் செல்ல மனநோயாக மாறும்போது கையாலாகாது கடினமாகிவிடுகிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் சில பெண்கள் சின்ன சின்ன விஷயங்களுக்குப் பயப்படுவது, எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் குறைகூறுவது, முன்பெல்லாம் எட்டு மணிநேரம் தூங்குபவர்கள் ஐந்து மணிநேரம்கூடத் தூங்குவதற்கு இயலாமல் இருப்பது, எப்போதுமே ஏதோ நடந்துவிடுவது போல எண்ணுவது என்று அவதிப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இதுபோன்றவர்கள் அனைவர் வீட்டிலும் இல்லாமல் இல்லை. இவை அனைத்தும் மன அழுத்தத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்டிப்பாகப் பாதிக்கும்.
இதற்கு இப்போது நிறைய மருத்துவ முறைகள் இருக்கின்றன. மன அழுத்தத்துடன் இருப்பவர்கள் எந்த வயதாக இருந்தாலும் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். குணப்படுத்த முடியாதது என்று எதுவும் கிடையாது. நம் மனதை நம்மைவிட வேறு யாராலும் கட்டுப்படுத்த முடியாது. பிரச்சினை இல்லாத மனிதர்களும் கிடையாது. அதைத் தீர்க்க முடியாத நிலையும் கிடையாது. மனித மனம் நினைத்தால் எந்த மலையையும் அசைத்துவிடலாம்.
* இந்தப் பயிற்சிகளைச் செய்வதற்கு முதலில் அமைதியான நல்ல வெளிச்சமும், காற்றும் இருக்குமாறு ஒரு இடத்தைத் தேர்வு செய்து அமருங்கள்.
* மிதமான சத்தத்தில் தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கலாம். இது மூளையின் செயல்பாட்டைச் சீர்செய்து, மனம் சிதைவதைத் தவிர்க்கும்.
மூச்சுப்பயிற்சி:
இந்த வகை பயிற்சி ஒருவருடைய சுவாசத்தைச் சீர்செய்து நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
* அமர்வு நாற்காலி அல்லது வசதியான இருக்கையில் அமர்ந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, நமக்குப் பிடித்த இடத்தில் இருப்பது போலவும் பிடித்ததைச் சாப்பிடுவது போலவும் ஒரு சின்ன நினைவு ஓட்டத்தை ஓடவிடலாம். அது ஒரு இயற்கைச் சூழலாகவும், வெளிநாட்டுப் பயணமாகவும் இருந்தால் நல்லது.
யோகாசனப்பயிற்சிகள்
* பத்மாசனம்
* உத்தனாசனா
* பாதஹஸ்டாங்காசனம்
மன அழுத்தத்திற்கு எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
மூச்சுப்பயிற்சி
இந்த யோகாசனப் பயிற்சிகள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்து கின்றன.
ஏரோபிக் உடற்பயிற்சிகள் எனப்படும் நடைப்பயிற்சி, ஜாக்கிங் மற்றும் வேக நடை போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.
ஒருவர் பயிற்சி செய்யும்போது எண்டார்ஃபின் எனப்படும் ஹார்போம் அதிக அளவு உற்பத்தியாகி மனதை அமைதிப்படுத்தும்.
மன அழுத்தம் குறிப்பாகப் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களுக்குப் பின் அதிகமாகிவிடுகிறது. இதுபோன்ற நிலைக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்குப் பதில் மூச்சுப்பயிற்சி, யோகப்பயிற்சி, ஏரோபிக் உடற்பயிற்சிகள் நல்ல பலன் கொடுக்கும். இதற்காக நாம் ஜிம் அல்லது இதற்கென அமைக்கப்பெற்ற பூங்கா என்று தேடிப்போக வேண்டாம். நம் வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.
மனதை மட்டும் பாதிக்கும் மன அழுத்தம் நாளடைவில் சைக்கோசொமேட்டிக் கோளாறுகளாக மாறிவிடுகின்றன. அதாவது அது உடலின் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. அதிக இதயத் துடிப்பு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படலாம்.
நாம் இன்னொருமுறை பிறக்கப் போவது மில்லை. இழந்த நொடிகளைத் திரும்பப் பெறப் போவதுமில்லை. கிடைத்திருக்கும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்வோம்.