பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி இவற்றின் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தினமும் விலை உயர்த்தப்பட்டு வரப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94க்கும் விற்பனையாகிறது.