திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தைச் சேர்ந்த திருத்தணி – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வள்ளியம்மாபுரம் கிராமத்தில் ராமலிங்கம்(60) என்பவர் தேவாலயம் நடத்திவருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு பூட்டி இருந்த தேவாலயத்தின் கதவுகளை அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர், அங்கு இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி., டி.வி, சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிறிஸ்துவ தேவாலயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.