இமாச்சலப் பிரதேசத்தில் நடப்பு ஆட்சியின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது. இந்தநிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தேர்தலை எதிர்க்கொள்ளும் வேலையில் காங்கிரஸ் கட்சி இறங்கி உள்ளது. முதற்கட்ட வேலையாக இமாச்சலப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பில் அந்தகட்சி தலைமை மாற்றம் கொண்டு வந்துள்ளது. எனவே இமாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக எம்.பி. பிரதீபா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மறைந்த வீரபத்ர சிங்கின் மனைவியும் மண்டி மக்களவை தொகுதி எம்.பி.யும் ஆவார்.