தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு அப்பர் கோவிலில் சித்திரைத்திருவிழா நடைபெற்றது. இந்ததிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, தேரின் மேற்பகுதி மீது உயர்மின் அழுத்த மின்சார கம்பி உரசியதாகவும் அதன் காரணமாக தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தவிபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளர். மேலும், 11 பேர் இறப்புக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும், அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சமும் வழங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.