தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை பங்கு பெறும் தேர்வை நடப்பாண்டிலேயே எழுத அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஆண்கள் மட்டுமே தேர்வெழுதி ராணுவத்தில் சேரும் நிலை இருந்து வருகிறது. இதனை எதிர்த்து இந்த தேர்வை பெண்களும் எழுத அனுமதிக்க வேண்டும் என்று குஷ் கால்ரா என்பவர் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பெண்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.இந்நிலையி
இந்த மனு நீதிபதி எஸ் கே கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் “இது பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவது போன்றது என்பதால் இதனை ஏற்க முடியாது என்றும் வரும் நவம்பர் மாதம் தேர்வு எழுத அனுமதியுங்கள் என்றும்” கூறினர். இவற்றை கேட்டுக்கொண்ட மத்திய அரசு “இந்த ஆண்டு குறுகிய காலம் இதை ஏற்க முடியாது” என்று வாதிட்டது . ஆனால் நீதிபதிகள் இதை ஏற்காமல் “எல்லை பாதுகாப்பு பிரச்னைக்கு பெண்களின் பங்களிப்பு தேவை என்பதால் உடனடியாக இந்த தேர்வை நடத்துவது சிறப்பானதாகும் அதனால் நடப்பாண்டிலேயே தேர்வை நடத்துங்கள்” என்று மத்திய அரசின் மனுவை நிராகரித்தனர்.