ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பெரு தலைநகர் லிமாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா 8 தங்கப் பதக்கம் உட்பட மொத்தம் 17 பதக்கங்ளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 14 வயதான இந்தியாவின் நம்யா கபூர் தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதே பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் மிக இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.
இது குறித்து நம்யா கபூர் தந்தை பிரவீன் கூறியதாவது :“நம்யா தனது மூத்த சகோதரி குஷியுடன் சேர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்தியாவிலிருந்து தனியாகப் அவள் பயணம் செய்வது இதுவே முதல் முறை, ஆனால் அவள் தன்னை நன்றாகக் கையாண்டு உள்ளார்”