பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மீந்தர் சிங். இவர், சிறந்த கபடி வீரர். கிளப் தலைவராகவும் உள்ள இவர், கபடி போட்டிகளையும் நடத்திவந்தார். இந்தநிலையில் பாட்டியாலா பல்கலைக்கழக வளாகத்தில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் திடீர் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஒரு பிரிவினரை அழைத்துப் பேசிக்கொண்டு இருந்த தர்மீந்தர் சிங்கை, மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.