பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழலால், எல்லோரும் பதற்றத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், பிரதமர் இம்ரான் கானின் 3வது மனைவி புஷ்ராபீவியின் நெருங்கிய தோழியான பரக்கான், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகத் தெரிகிறது. இதை எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி இருந்தன. இந்தச் சூழ்நிலையில் இம்ரான் கான் தற்போது நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப் பயந்து, பரக்கான் துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவரது கணவர் முன்பே அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர, இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தனைவிட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.