தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்திருந்தார். பின்னர், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதா மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அதனையடுத்து, தமிழ்நாட்டின் உள்ள பல்கலைக்கழங்களின் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் மசோதா காரசார விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போல துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா தமிழகத்திலும் நிறைவேறி உள்ளது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றட்ட சட்டமசோதாக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து நேற்றே சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக, சட்டத்துறை மூலமாக சட்டமசோதாக்கள் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.