ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் எல்லையம்மன் கோயில் உள்ளது. புகழ்பெற்ற இந்தகோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு நடந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் உண்டியலில் பணம், நகை என தங்களது காணிக்கைகளை செலுத்தினர். இந்தநிலையில், இரவு அனைவரும் சென்ற பின், பூசாரியும் கோவில் பணிகளை முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு செல்வதை அங்கு மறைந்திருந்து நோட்டமிட்ட திருடன் ஒருவன், கோயில் ஜன்னலில் இருந்த கம்பிகளை நீக்கி விட்டு உள்ளே குதித்துள்ளான். பின்னர், கருவறையில் அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகள் மற்றும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்த பணம் என எல்லாவற்றையும் மூட்டையில் கட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியேற முயற்சித்தபோது, ஜன்னலில் சிக்கியுள்ளார். அந்த நபர் வெகு நேரம் முயற்சி செய்தும் ஜன்னலில் இருந்து மீள முடியாததால் களைப்பில் அப்படியே உறங்கியுள்ளார். இதனையடுத்து காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள், ஜன்னலில் சிக்கியிருந்த திருடனை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவலர்கள் அவனை கைது செய்துள்ளனர். இயக்குநர் சுந்தர் ச் இயக்கி வெளியான காமெடி ஹிட் திரைப்படமான கலகலப்பில் நடைபெற்ற சீன் போல நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.