day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஷவர்மா கடைகளில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஷவர்மா கடைகளில் ஆய்வு

கேரளாவில் கடந்த வாரம் ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் ஷவர்மா சாப்பிட்டதால் மயக்கம் அடைந்தனர். இதனால், தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் குறிப்பாக ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பூந்தமல்லி ஆவடி, மாதவரம், மணவாளநகர், திருவெற்றியூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக 60க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், ஷவர்மா கடைகள் வைத்திருந்ததை பழைய கோழிகறிகளை கண்டறிந்தனர். இதனையடுத்து தரமற்ற முறையில் செயல்பட்ட 10 கடைகள் மீது தலா ரூ. 2,000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று தரமற்ற நிலையில் செயல்படும் ஷவர்மா கடைகள் ஆய்வு மேற்கொண்டு சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!