திருப்பதி திருமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 14 முதல் 16ம் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அந்த நாட்களில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார, சேவை மற்றும் நிஜபாத தரிசனம் சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட உள்ளன.