day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

“திருமண நாளில் சமந்தா பகிர்ந்த புகைப்படமும் கடந்த கால காதலும்….”

“திருமண நாளில் சமந்தா பகிர்ந்த புகைப்படமும் கடந்த கால காதலும்….”

நாகசைதன்யாவின்  பிரிவுக்கு பிறகான திருமண நாளில் நடிகை சமந்தா வெள்ளை நிற உடையில்  புகைப்படம் ஒன்றை வெளியிட்ட கடந்த கால காதல் விஷயங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி சமந்தாவுக்கும்,தெலுங்கு நடிகர் நாகசைதன்யா விற்கும் திருமணம் நடைபெற்றது. இந்து – கிறிஸ்தவ முறைப்படி இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இருவரும் குடும்ப வாழ்கை தொடங்கிய நிலையிலும் தொடர்ந்து சமந்தா படங்களில் நடித்து வந்தார். அந்த வரிசையில் சமீபத்தில் அவரது நடிப்பில் ‘தி பேமலி மேன்’ என்ற வெப் தொடர் வெளியானது. அந்த தொடரில் அதிக கவர்ச்சியுடன்  நடித்ததால் சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் டிவிட்டரில் தனது பெயிரில் ‘எஸ்’ என சமந்தா மாற்றியது இருவரும் விவகாரத்து செய்யப்போகிறார்கள் என்ற சலசலப்பை ரசிகர்கள் மத்தியில்  ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அவர்களுடைய பிரச்னை குறித்து இருவரும் வாய் திறக்காத நிலையில்  வெறும் வதந்தியாக முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கையில் தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர். இவர்களுடைய இந்த பிரிவு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருடைய திருமண நாளான நேற்று சமந்தா மிகவும் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதோடு வெள்ளை நிற உடையில் உள்ள ஒரு புகைப்படத்தையும்   பகிர்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளன. அந்த புகைப்படம் கடந்த கால  காதல் மற்றும் பசுமையான நினைவுகளை நினைவு கூர்வதாக உள்ளன.  அதேபோன்று அவர் போட்டுள்ள அந்த பதிவில் “பழைய காதலின் பாடல்கள்,மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள். பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள்  உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்தவராக எழுதியுள்ளார்.  அவர் எழுதியுள்ள  இந்த வார்த்தைகளுக்கு ரசிகர்கள் உருவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!