மாநில அளவிலான 5ம் ஆண்டு களரி போட்டிகள் வரும் 17ம் தேதி திருப்பூரில் தொடங்க இருக்கிறது. அன்று காலை 9 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மகாலில் நடைபெறும் நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும். அப்போது இதில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இதில் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, பாலக்காடு மற்றும் கோவை, உடுமலையை சேர்ந்த களரி ஆசான்கள் நடுவர்களாக கலந்துகொள்கின்றனர். போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் வெற்றி பெறும் களரி பங்கேற்பாளர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுகின்றனர்.