கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த வாரம் 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்துவருகின்றனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு, இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதிக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்க்கா ஸ்டாலின், ஏழுமலையானை தரிசித்தார். அவர் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின் வழியாகச் சென்று சாமியைத் தரிசித்தார். அவருக்கு திருப்பதி கோயில் நிலைய அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கி ஆசிர்வதித்தனர்.