திருப்பதியில் உள்ள ஏழுமலையானுக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார். திருப்பதி கோயிலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, ஷீ செல்ஸ் நாட்டைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் ரூ.20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை கோயிலுக்கு தானமாக வழங்கினார். ஷீ செல்ஸ் நாட்டில் ஏழுமலையான் கோயில் கட்ட வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை வைத்தார். திருப்பதி கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர் ஒருவர் நிலத்தைத் தானமாக வழங்கியது இதுவே முதல் முறையாகும்.