இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் 25ஆவது தலைமை தேர்தல் ஆணையராக வரும் 15ஆம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திரா வரும் 14ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில் புதிய தேர்தல் ஆணையரை நியமித்து தேர்தல் ஆணையம் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.