சென்னையில், நேற்று நடந்த திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தெலுங்கு திரைப்படங்கள் தோல்வியுற்றால் அதன் நாயகர்கள் தனது சம்பளத்தில் பாதியை தயாரிப்பாளருக்கு திருப்பித் தந்துவிடுவதாக, தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தெலுங்கு கதாநாயகர்களை தமிழ்த்திரையுலக நடிகர்கள் பின்பற்ற வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழில் திரைப்படங்கள் தோல்வியுற்றால் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவதாகக் கூறிய தயாரிப்பாளர் கே.ராஜனின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி வருகிறது.