பீஸ்ட் பட வெளியீட்டுக்கு பிறகு தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய். சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ள இந்த படத்தில் முதற்கட்டமாக பாடல் காட்சி படப்பிடிப்பு அடுத்த 5 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. காமெடி கலந்த குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, வில்லனாக பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தபடத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.