தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான மக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.