தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, துறை ரீதியான முக்கிய அறிவிப்புகள் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கைகள் மீதான விவாத கூட்டத்தொடர் 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது. சட்டப்பேரவையில் இன்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்களான சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்துவருகின்றனர்.