தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. அந்த திட்டம் எல்லா மக்களுக்கும் பயனாய் அமைந்தது. அதுதவிர, அவர் கொண்டுவந்த திட்டங்களும் ஏராளம். அதில் பல திட்டங்களை சில மாநிலங்கள் காப்பியடித்து செயல்படுத்திவருகின்றன. அதில் குறிப்பிடத்தகுந்த திட்டம் அம்மா உணவகம். இத்திட்டம் ஒருசில சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா கொண்டுவந்த இலவச மின்சார திட்டம் பஞ்சாப்பிலும் அமல்படுத்தப்பட இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று முதன்முறையாக ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார். அவருடைய ஆட்சியில் பல்வேறு புதிய அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜூலை மாதம் முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அவ்வரசு அறிவித்துள்ளது. இதை, தேர்தல் வாக்குறுதிகளில் ஆம் ஆத்மி கட்சி சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.