பாரதிய ஜனதா ஆரம்பிக்கப்பட்ட தினமான இன்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளீயிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சி உறுதி செய்யப்பட்டு விட்டது எனவும், இனி தாமரையின் வளர்ச்சி மற்றும் பிரதமரின் நல்லாட்சியை, தமிழகத்திலும் நடத்தி காட்ட வேண்டியது நம் கடமை என தெரிவித்துள்ளார். மேலும், ஸ்தாபகர் தினமான இன்று, நாம் அதற்கான உறுதிமொழியை எடுத்து கொள்வோம் என்று கூறியுள்ளார். அடுத்து வரும், 15 நாட்கள், மத்திய தலைமை நமக்கு வகுத்து கொடுத்திருக்கும் திட்டங்களை ஆர்வத்துடனும், கவனத்துடனும் செய்து முடிப்போம். அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு, இந்த இரு வார நிகழ்ச்சிகள் இன்றியமையாதவை. ஒவ்வொரு மாவட்ட தலைவரும், மண்டல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சிகளை, தங்கள் பகுதிகளில் மிக தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.