‘தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் உண்டு. மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்கும்போது தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொத்து வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டபோது செய்தியாளர்களிடன் தெரிவித்தார். தமிழ் மொழி அனைத்து மொழிகளையும் விட மூத்த மொழி. எனவேதான் பிரதமர் மோடியே தமிழ் மொழியின் பெருமைகளை சுட்டிக்காட்டி வருகிறார் என்ற ஜெயக்குமார் ஏ.ஆர்.ரகுமான் கூறியது போல தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.