வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூர் ராஜலிங்கம் நகர் 2ஆவது தெருவில் வசித்து வருபவர் மாதவன். இவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாதவன் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காட்பாடி தீயணைப்பு துறையினர் வந்துள்ளனர். இவர்களில் முருகேசன், பால்பாண்டி என்ற இரு தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இருந்த நல்ல பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டிற்குள் பத்திரமாக விட்டனர். குடியிறுப்பு பகுதியில் விஷப்பாம்புகள் நடமாட்டம் இருப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.