உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருவதால் உலக அளவில் பொருளாதரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் எண்ணைய் முதல் தங்கம் வரை அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. அந்தவையில், சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்த விலையேற்றம் மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நேற்று ரூ.39,576ஆக விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.39.896க்கு விற்பனையாகிறது. இதனையொட்டி ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.4947-ல் இருந்து அதிகரித்து ரூ.4,987ஆக உள்ளது. கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் மொத்தம் ரூ.1,416 அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்து. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.72.70-ல் இருந்து ரூ.73.80ஆகவும், கிலோ ரூ.72,700-ல் இருந்து ரூ.73,800 ஆக உயர்ந்து உள்ளது.