தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாகவே தொடர்ச்சியாக ஏறுமுகமாக உள்ளது. 8 கிராம் கொண்ட 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.39,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.4,882ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொருத்தவரை இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.71.30 காசுகளாக விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.71,300ஆக விற்பனையாகிறது.